Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 474)
Paththati 14 - நாத பத்ததி
தவ ஏதத் ஸ்ரீரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ந்ருணாம் பவதி ஆக: சிந்தா ரண ரணக பங்காய ரணிதம் சரீரே ஸ்வம் பாவம் ப்ரதயதி யதாகர்ணநவசாத் ந ந: கர்ணே பாவீ யம மஹிஷ கண்டா கண கண:
ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதர்கள் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி மிகுந்த அச்சம் கொள்ளும்போது, உன்னுடைய இனிய நாதம் அவர்களது பயத்தைப் போக்க ஏதுவாக உள்ளது. இந்த உடலானது தனது இயல்பான அழிவை அடையும் காலத்தில், உன்னுடைய இந்த நாதத்தைக் கேட்பதன் காரணமாக, எங்கள் காதுகளில் யமனின் வாகனமாக உள்ள எடுமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் கண கண என்னும் ஓசை கேட்காமல் போய்விடும் .
பாதுகையை அண்டியவர்கள் வாழும் காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து வாழாமல், எந்தவிதமான அச்சமும் இன்றி வாழ்வார்கள் என்று கடந்த ச்லோகத்தில் கூறினார். இங்கு, உயிர் பிரியும் நேரத்திலும் பயம் அற்று இருப்பார்கள் என்றார்.