Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 473)
Paththati 14 - நாத பத்ததி
ச்ருதி ச்ரேணீ ஸ்தேய ச்ருதி ஸுபக சிஞ்ஜா முகரிதாம் பஜேம த்வாம் பத்மா ரமண சரணத்ராயிணி பரம் ந முத்ரா நித்ராண த்ரவிணகண விச்ராண நதசா விசால அஹங்காரம் கமபி கந ஹுங்கார பருஷம்
ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மகிழ்வை ஏற்படுத்தும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதவரிகளுக்கு, பலரும் முரண்பட்ட பொருளைக் கூறி விவாதம் செய்ய முற்படும்போது, உன்னுடைய நாதம் மூலம் செவிக்கினிய தீர்ப்பை நீயே அளிக்கிறாய். இப்படிப்பட்ட உன்னையே நாங்கள் வணங்கி நிற்போம். அற்பமான சிறு பொருளைக்கூட ஒரு சிலர் அரக்கு முத்திரை இட்டு, பாதுகாத்து வைத்தபடி, அதனை ஏதோ ஓர் அற்பமான காரணத்தினால் மற்றவர்களுக்குச் சிறிது வழங்கக்கூடும். அந்த நேரத்தில், “தான்தாம் செய்கிறோம்”, என்று கர்வம் காரணமாக, அனைவரையும் அதட்டி, பயத்தை உண்டாக்குகின்ற மனிதர்களை நாங்கள் அண்டமாட்டோம்.