Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 472)

Paththati 14 - நாத பத்ததி

விலாஸை: க்ரீணந்தோ நிகிலஜந சேதாம்ஸி விவிதா: விஹாரா: தே ரங்கக்ஷிதி ரமண பாதாவநி முஹு: விகாஹந்தாம் அந்தர்மம விலுடத் அந்தர் மணிசிலா கலாத்கார வ்யாஜ க்ஷரத் அம்ருத தாரா தமநய:

திருவரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் தங்களது விளையாட்டுக்கள் மூலம் அனைவரது மனதையும் வசப்படுத்தி விடுகின்றன. அவை எழுப்புகின்ற, “களுக், களுக்”, என்ற ஒலியின் இனிமையால் அம்ருத ப்ரவாஹம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உனது ஸஞ்சாரங்கள் என் மனதில் புகவேண்டும்.