Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 471)
Paththati 14 - நாத பத்ததி
உபக்நம் ஸம்வித்தே: உபநிஷத் உபோத்காத வசநம் தவ ச்ராவம் ச்ராவம் ச்ருதி ஸுபகம் அந்த: மணிரவம் விஜ்ரும்பந்தே நூநம் மது மதந பதாவநி மம த்ரவீபூத த்ராக்ஷா மதுரிம துரீணா: ப்ரணிதய:
மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அறிவு என்ற கொடியானது படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாக உபநிஷத்துக்கள் உள்ளன. அந்த உபநிஷத்துக்களின் முன்னுரையாக, செவிக்கு இனிய உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்களின் நாதங்கள் உள்ளன. அதனைக் கேட்டுக்கேட்டு நன்கு கரைந்த திராக்ஷை பழத்தின் இனிமையைச் சுமக்கின்ற சொற்கள் மேலும்மேலும் வெளிவருகின்றன என்பது நிச்சயம்.