Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 470)

Paththati 14 - நாத பத்ததி

த்ரிக விநிஹித ஹஸ்தம் சிந்தயித்வா க்ருதாந்தம் கதவதி ஹ்ருதி மோஹம் கச்சதா ஜீவிதேந பரிகலயது போதம் பாதுகே சிஞ்ஜிதம் தே த்வரயிதும் இவ ஸஜ்ஜம் த்வத் விதேயம் முகுந்தம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உடலை விட்டு ப்ராணனுடன் கூடிய மனம், எனது கழுத்தில் கையை வைத்து அழுத்துகின்ற யமனை எண்ணி மயக்கம் அடைந்துவிடும். அப்போது உன் வசப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை வேகமாக வரச்செய்கின்ற உன்னுடைய நாதம், எனக்கு நல்ல ஞானத்தை அளிக்கவேண்டும்.