Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 469)
Paththati 14 - நாத பத்ததி
ப்ரசமயது பயம் ந: பச்சிம ச்வாஸகாலே ரஹஸி விஹரணம் தே ரங்கநாதேந ஸார்த்தம் நியதம் அநுவிதத்தே பாதுகே யத் நிநாத: நிகில புவந ரக்ஷா கோஷணா கோஷலீலாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின்போது உண்டாகும் உன்னுடைய நாதங்கள், “ நிச்சயம் அனைத்து உலகங்களையும் காப்பேன் ”, என்று பறைசாற்றுவது போல் உள்ளது. இப்படிப்பட்ட இந்த சப்தமானது, என்னுடைய இறுதி மூச்சு வெளியில் கிளம்பும்போது, யாரும் அறியாதபடி அங்கு வருகின்ற ஸ்ரீரங்கநாதனுடன் கூடியபடி இருந்து, எனது பயத்தை நீக்கி விடுகிறது.
சரணாகதி செய்தவன் இறக்கின்ற காலத்தில், அங்கு வேறு யார் கண்ணிலும் புலப்படாத வகையில் ஸ்ரீரங்கநாதனைப் பாதுகை அழைத்து வந்து சேவை சாதிப்பாள் என்பதைக் கூறுகிறார்.