Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 468)

Paththati 14 - நாத பத்ததி

கமல வந ஸகீம் தாம் கௌமுதீம் உத்வஹந்தம் ஸவிதம் உபநயந்தீ தாத்ருசம் ரங்கசந்த்ரம் ப்ரளய தின ஸமுத்தாந் பாதுகே மாமகீநாந் ப்ரசமய பரிதாபாந் சீதளை: சிஞ்ஜிதை: ஸ்வை:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரணம் சம்பவிக்கின்ற நேரத்தில் என்னுடைய வேதனைகளை நீ போக்கவேண்டும். எப்படி என்றால் – தாமரைக் காட்டின் தோழியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் நிலவை வைத்துக்கொண்டிருக்கிற ஸ்ரீரங்கநாதனை என் அருகில் எழுந்தருளப் பண்ணவேண்டும். இதன் மூலம் குளிர்ந்த உன்னுடைய நாதங்கள் மூலமாக எனது வேதனைகளை நீக்கவேண்டும்.