Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 467)

Paththati 14 - நாத பத்ததி

கரண விகம காலே கால ஹுங்கார சங்கீ த்ருதபதம் உபகச்சந் தத்த ஹஸ்த: ப்ரியாப்யாம் பரிணமயது கர்ணே ரங்கநாத: ஸ்வயம் ந: ப்ரணவம் இவ பவத்யா: பாதுகே மஞ்ஜுநாதம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அடங்குகின்ற அந்திம காலத்தில் யமன் என்னிடம் வந்து ”ஜும்” என்று அதட்டுவானே என்ற சந்தேகம் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுகிறது. அதனால், அந்த நேரத்தில் தன்னுடைய இரண்டு பிராட்டிகளும் கை கொடுக்க, மிகவும் வேகமாக என்னிடம் ஓடி வந்து, எனது காதில் ப்ரணவத்தின் ஓசை போன்ற உன்னுடைய அழகான நாதத்தைக் கேட்கும்படிச் செய்யவேண்டும்.