Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 466)
Paththati 14 - நாத பத்ததி
விகல கரண வ்ருத்தௌ விஹ்வல அங்கே விலக்ஷம் விலபதி மயி மோஹாத் பிப்ரதீ சௌரி பாதம் பரிசரம் அதிகந்தும் பச்ய பாதாவநி த்வம் ப்ரதி பயம் அகிலம் மே பர்த்ஸயந்தீ நிநாதை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அனைத்தும் தளர்ந்து, உடல் முழுவதும் குன்றி, அறிவு இழந்து, யாரைக் குறித்து எதனைக் கூறுவது என்று புரியாமல், எதனையோ கூறி அழும் காலம் உண்டாகலாம். அப்போது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை நீ தரித்துக் கொண்டு, உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் எனக்கு உண்டாகின்ற அனைத்து விதமான பயத்தின் காரணங்களை, அவை பயந்து ஓடும்படியாக விரட்டியவாறு நீ எனக்கு அருகில் வரவேண்டும்.