Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 465)

Paththati 14 - நாத பத்ததி

சரணம் உபகதே த்வாம் சார்ங்கிண: பாதரக்ஷே ஸக்ருதிதி விதிஸித்தம் த்யக்துகாமே விமோஹாத் ப்ரசலித மணிஜால வ்யஞ்ஜிதை: சிஞ்ஜிதை: ஸ்வை: அலமலம் இதி நூநம் வாரயஸி ஆதரேண

சார்ங்கம் என்னும் வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை ஒருமுறை சரணாகதி செய்தாலே போதுமானது என்று விதிக்கப்பட்ட சாஸ்திரம் அறியாமல் சரணாகதி செய்தவன், மீண்டும் சரணாகதி செய்ய முனைகிறான். அப்போது வேகமாக அவனைத் தடுக்க நீ முயலும்போது அசைகின்ற உனது இரத்தினக்கற்களின் நாதம் கொண்டு, “போதும் போதும்”, என்று மிகுந்த ஆசையுடன் தடுக்கிறாய் என்பது நிச்சயம்.