Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 464)
Paththati 14 - நாத பத்ததி
மதுரிபு பதரக்ஷே மந்த புத்தௌ மயீத்வாம் அநவநி மஹிமாநம் த்வத் ப்ரஸாதாத் ஸ்துவாநே மணி நிகர ஸமுத்தை: மஞ்ஜுநாதை: கவீநாம் உபரமயஸி தாம்ஸ்தாந் நூநம் உத்ஸேக வாதாந்
மது என்ன அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அற்பமான அறிவுள்ள நான், எல்லையற்ற பெருமை நிறைந்த உன்னை, உன்னுடைய அருள் காரணமாகத் துதிக்கிறேன். அந்த நேரத்தில் எனது சொற்களைத் தூஷிக்கின்ற பல கவிஞர்களின் கர்வம் நிறைந்த சொற்களை உனது இரத்தினக்கற்கள் மூலம் ஏற்படும் இனிமையான நாதம் கொண்டு நீ அடக்குறாய் என்பது உண்மை.