Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 463)
Paththati 14 - நாத பத்ததி
பத கமலம் உதாரம் தர்சயந்தீ முராரே: கல மதுர நிநாதா கர்ப்ப ரத்நை: விலோலை: விஷம விஷய த்ருஷ்ணா வ்யாகுலாநி ப்ரஜாநாம் அபிமுகயஸி நூநம் பாதுகே மாநஸாநி
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அசைகின்ற உன்னுடைய இரத்தினக்கற்களின் இனிமையான நாதம் மூலம் ஸ்ரீரங்கநாதனின் கருணை மிகுந்த திருவடித் தாமரைகளை மக்களுக்குக் காண்பிக்கிறாய். இதன் மூலம் உலக விஷயங்களில் கொண்ட ஆசை என்னும் கானல்நீர் காரணமாக கலங்கி நிற்கும் மனிதர்களின் மனம் என்னும் விலங்குகளை, உன்னைக் காணும்படிச் செய்கிறாய்.