Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 462)
Paththati 14 - நாத பத்ததி
அயமயமிதி தைஸ்தை: கல்பிதாந் அத்வ பேதாந் ப்ரதிபதம் அவலோக்ய ப்ராணிநாம் சடுல மணி கலாபை: சௌரி பாதாவநி த்வம் முகரயஸி விஹாரை: முக்தி கண்டாப தாக்ர்யம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முக்தி அடைவதற்கு இதுவே சிறந்த வழி, இதுவே சிறந்த வழி என்று பல மதங்களால் அடிக்கடிக் கூறப்படும் பல்வேறு முரணான மார்க்கங்களைக் கண்டு மக்கள் கலங்கி நிற்கின்றனர். உன்னுடைய அசைகின்ற இரத்தினங்களின் நாதம் மூலமாக மோக்ஷத்திற்கான ராஜமார்க்கம், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே என்று கூறுகிறாய் போலும்.