Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 461)
Paththati 14 - நாத பத்ததி
நிஜபத விநிவேசாத் நிர்விசேஷ ப்ரசாராந் பரிணமயதி பக்தாந் ரங்கநாதோ யதா மாம் இதி விஹரண காலே மஞ்ஜு சிஞ்ஜா விசேஷை: ஹிதம் உபதிசஸீவ ப்ராணிநாம் பாதுகே த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ அனைவரிடமும், “ஸ்ரீரங்கநாதன் என் (பாதுகை) போன்றவர்களைத் தன்னுடைய திருவடியில் வைப்பதன் மூலம், அவர்களுக்கும் என்னைப் போன்று அவனுடன் சேர்ந்து ஸஞ்சாரம் செய்யும்படியான நிலையை அளிக்கிறான்”, என்று உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் நன்மையை உபதேசிக்கிறாய் போலும்.