Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 460)

Paththati 14 - நாத பத்ததி

குரு ஜந நியதம் தத் கோபிகாநாம் ஸஹஸ்ரம் திநகர தநயாயா: ஸைகதே திவ்யகோப: வசம் அநயதீ அயத்நாத் வம்ச நாத அநுயாதை: தவ கலு பதரக்ஷே தாத்ருசை: மஞ்ஜுநாதை:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யமுனையில் மணல் குன்றுகளில், பெரியோர்களால் அடக்கப்பட்ட ஆயிரம் கோபியர்களைக் கண்ணன் தன்னுடைய புல்லாங்குழலின் நாதத்தால் பின் தொடர வைத்தான் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களை உன்னுடைய இனிமையான நாதத்தால் அல்லவோ கண்ணன் எளிதாக வசப்படுத்திக் கொண்டான்?

இதுவரை பாதுகைகளின் நாதத்தை வர்ணிக்கின்ற ப்ரகரணம் (context) முடிந்தது. இந்த ச்லோகம் முதல், ஸ்ரீரங்கநாதன் அளிக்கின்ற ஹிதம் என்னும் மோக்ஷ உபாயம் குறித்துக் கூறப்படும் ப்ரகரணம் தொடங்குகிறது. மோக்ஷ உபாயத்தைக் கண்ணனாக நின்று சரமச்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் உபதேசித்ததால் இந்த ச்லோகத்தில் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுகிறார்.