Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 459)
Paththati 14 - நாத பத்ததி
பரிஷதி விரதாயாம் பாதுகே ரங்கபர்த்து: பரிஜநம் அபவார்ய ப்ரஸ்திதஸ்ய அவரோதாந் மணி நிகர ஸமுத்யந் மஞ்ஜுநாத உபதேசாத் அபிலபஸி யதார்ஹம் நூநம் ஆலோக சப்தம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருமண்டபத்திலிருந்து புறப்பட்டவுடன் அங்குள்ள ஊழியர்களை உன்னுடைய நாதத்தின் ஒலி மூலம் புறப்பட்டச் சொல்லுகிறான். அதன் பின்னர் அந்தப்புரத்திற்குப் புறப்படும் ஸ்ரீரங்கநாதனுக்கு உனது இரத்தினக்கற்களின் மூலம் எழுகின்ற இனிமையன நாதம் கொண்டு, “ஸ்ரீரங்கநாத விபோ ஜய விஜயீ பவ”, என்று கூறுகிறாய்.