Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 458)
Paththati 14 - நாத பத்ததி
விஹரண ஸமயேஷு ப்ரத்யஹம் ரங்கபர்த்து: சரண நக மயூகை: ஸோத்தரீயா விசுத்தை: பரிணமயஸி நாதம் பாதுகே கர்ப்ப ரத்நை: தமயிதுமிவ சிஷ்யாந் தீர்க்கிகா ராஜஹம்ஸாந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் அன்றாடம் ஸஞ்சாரம் செய்யும்போது, தூய்மையாக உள்ள அவனது திருவடி நகங்களின் ஒளியானது உன் மீது வெண்மையான மேல் ஆடையைப் போன்று விழுகிறது. இதனைக் காணும்போது ஆசார்யன் போன்று நீ உள்ளாய். யாருக்கு என்றால் – பெரியகோவிலில் இருக்கின்ற திருச்சுற்றுக்களில் காணப்படும் அன்னங்களுக்கு, நல்ல விஷயங்களை உன் உள்ளே இருக்கின்ற இரத்தக்கற்களின் நாதம் மூலம் கற்பிக்கிறாய் போலும்.