Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 457)
Paththati 14 - நாத பத்ததி
தநு தநய நிஹந்து: ஜைத்ர யாத்ரா அநுகூலே சரத் உபகமகாலே ஸஹ்யஜாம் ஆபதந்தி ச்ருதி மதுரம் உதாரம் சிக்ஷிதும் தே நிநாதம் பரிஹ்ருத நிஜ வாஸா: பாதுகே ராஜஹம்ஸா:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனு என்பவளின் பிள்ளைகளான அசுரர்களை அழிக்கின்ற வெற்றி ஸஞ்சாரம் செய்வதற்கான சரத் ருது காலம் வந்துவிட்டது. அப்போது உயர்ந்த அன்னப் பறவைகள் தம்முடைய இருப்பிடத்தை விட்டு, காவிரிக்குப் பறந்து வருகின்றன. ஏன் என்றால் - ஸ்ரீரங்கநாதன் உன்னைச் சாற்றிக்கொண்டு நடக்கின்ற அந்த நேரத்தில் எழுகின்ற, இனிமையானதும் கம்பீரமானதும் ஆகிய உன்னுடைய நாதத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஆகும்.