Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 456)

Paththati 14 - நாத பத்ததி

வகுள தர தநு: த்வம் ஸம்ஹிதாம் யாம் அபச்ய: ச்ருதி பரிஷதி தஸ்யா: சௌரபம் யோஜயந்தீ ஹரி சரண ஸரோஜ ஆமோத ஸம்மோதிதாயா: ப்ரதிபத ரமணீயா: பாதுகே தே நிநாதா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் எழுகின்ற வாசனை காரணமாக நீ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அந்த இன்பம் காரணமாக, உன்னுடைய ஒவ்வொரு அடிவைப்பிலும் இனிமையான நாதங்கள் உண்டாகின்றன. நீ வகுளாபரரான நம்மாழ்வாராக அவதரித்து எந்தத் திருவாய்மொழியை அருளிச்செய்தாயோ, அவைகளின் சாரத்தையே அல்லவோ வேதங்கள் கூறுகின்றன (திருவாய்மொழி வேதங்களின் சாரம் அல்ல, வேதங்களே திருவாய்மொழியின் சாரங்கள் என்னும் நயம் காண்க).