Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 455)

Paththati 14 - நாத பத்ததி

ரஹித புஜக தல்பே த்வத் ஸநாதே ப்ரஜாநாம் ப்ரதிபய சமநாய ப்ரஸ்திதே ரங்கநாதே ப்ரதம உதயமாந: பாதுகே தூர்ய கோஷாத் ப்ரதிபலதி விநாத: பாஞ்சஜந்யே த்வதீய:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனிப்பதை விடுத்து, மக்களின் பயத்திற்கான காரணங்களை நீக்குவதற்காக ஸ்ரீரங்கநாதன் உன்னுடன் புறப்படுகிறான். அப்போது எழுகின்ற வாத்திய ஒலிகளுக்கும் முன்பாக உன்னுடைய இனிமையான நாதம் எழுகிறது. அந்த நாதம், ஸ்ரீரங்கநாதனின் திருக்கரத்தில் உள்ள பாஞ்சஜன்யம் என்ற சங்கின் மீதும் எதிரொலிக்கிறது.