Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 454)

Paththati 14 - நாத பத்ததி

சரண கமலம் ஏதத் ரங்கநாதஸ்ய நித்யம் சரணம் இதி ஜநாநாம் தர்சயந்தீ யதாவத் ப்ரதிபதம் அபி க்ருத்யம் பாதுகே ஸ்வாது பாவாத் அநுவததி பரம் தே நாதம் ஆம்நாய பங்க்தி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற இந்தத் திருவடிகளே அனைவருக்கும் எப்போதும் ரக்ஷகம் என்று மக்களுக்கு வேதங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இதனை வேதங்கள் தாமாகவே கூறுவது அல்ல. ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடி வைப்பிலும் உண்டாகும் இனிமையான உன்னுடைய நாதம் கொண்டு, இந்தக் கருத்தை நீ கூறுகிறாய். இதனையே வேதங்கள் அனுவாதம் செய்கின்றன.

ஒருவர் கூறுவதை மீண்டும் கூறுதல் என்பது அனுவாதம் எனப்படும். இங்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம் என்பதைப் பாதுகைகள் கூற, அதனையே வேதங்கள் மீண்டும் கூறுகின்றன என்று கருத்து.