Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 453)
Paththati 14 - நாத பத்ததி
அநுக்ருத ஸவநீய ஸ்தோத்ர சஸ்த்ராம் நிநாதை: அநுகத நிகமாம் த்வாம் ஆஸ்திதோ ரங்கநாத: அநிதர விபுதார்ஹம் ஹவ்யம் ஆஸ்வாத இஷ்யந் விசதி சரணரக்ஷே யஞ்ஜவாடம் த்விஜாநாம்
சரணம் அடைவதற்கு ஏற்றதாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மற்ற தேவதைகளுக்கு ஏற்க இயலாத அவிர்பாகத்தைச் சுவைப்பதற்காக, அந்தணர்கள் யாகம் செய்கின்ற இடத்திற்கு ஸ்ரீரங்கநாதன் வருகிறான். அப்படி அவன் வரும்போது, அந்த யாகங்களுக்கு ஏற்ற சஸ்த்ரம் என்னும் மந்த்ரம் ஆகியவை ஒலிப்பது போன்று, உன்னுடைய இனிமையான நாதமும் கேட்கின்றன.
ஸர்வேச்வரன் யாகங்களின் அளிக்கப்படும் அவிர்பாகத்தை, அங்கு முழங்கப்படும் வேத ஒலிகள் கொண்டு ஏற்கிறான் என்று கருத்து. இங்கு வேத ஒலிகளுடன் பாதுகை உள்ளது. ஆக பாதுகையே வேதம் என்றாகிறது. இப்படிப்பட்ட வேதமாகிய பாதுகையில் நின்று அவிர்பாகத்தை ஏற்கிறான்.