Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 452)
Paththati 14 - நாத பத்ததி
விஹரதி விசிகாயாம் ரங்கநாதே ஸலீலம் கமந வச விலோலை: கர்ப்பரத்நை: க்வணந்த்யா: மணி வலய நிநாதை: மஞ்ஜுலை: தே திசந்தி ப்ரதி வசநம் உதாரம் பாதுகே பௌரநார்ய:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவரங்கத்தின் மாட வீதிகளில் மகிழ்ச்சியுடன் வலம் வருகிறான். அப்போது உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினங்கள், “நம்பெருமாள் வந்தான்”, என்று அறிவிப்பதாக ஒலித்தபடி உள்ளன. அப்போது அங்கு ஓடி வரும் திருவரங்கத்தின் பெண்களின் கைகளில் இருக்கின்ற அழகான கற்கள் பதிக்கப்பட்ட வலையல்களின் உள்ளே இருக்கின்ற மணிகள் இன்பமாக ஓசை எழுப்புகின்றன. இவை உன்னிடம், “இதோ வந்தோம்”, என்று மறுமொழி கூறுவது போல் உள்ளன.