Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 451)

Paththati 14 - நாத பத்ததி

பரிமித பரிபர்ஹம் பாதுகே ஸஞ்சரிஷ்ணௌ த்வயி விநிஹித பாதே லீலயா ரங்கநாதே நியமயதி விபஞ்சீம் நித்யம் ஏகாந்த ஸேவீ நிசமயிதும் உதாராந் நாரதஸ்தே நிநாதாந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருவடிகளை உன் மீது வைத்து, குடை முதலான தன்னுடைய வஸ்துக்களுடன் உல்லாசமாக ஸஞ்சாரம் செய்கின்றான். நாரதர் எப்போதும் ஸ்ரீரங்கநாதனை, அவன் ஏகாந்தமாக உள்ளபோது சேவிப்பவர் ஆவார். அப்படிப்பட்ட நாரதர், ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார நேரத்தில், தன்னுடைய வீணையை நிறுத்திவிடுகிறார். இதன் காரணம் - உன்னுடைய கம்பீரமான நாதத்தைக் கேட்பதற்கே ஆகும்.