Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 450)
Paththati 14 - நாத பத்ததி
ஆதௌ ஸஹஸ்ரம் இதி யத் ஸஹஸா மயா உக்தம் துஷ்டூஷதா நிரவதிம் மஹிம அர்ணவம் தே ஆம்ரேடயஸி அத கிம் ஏதத் ம்ருஷ்யமாணா மஞ்ஜு ஸ்வநேந மதுஜித் மணிபாதுகே த்வம்
மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முன்பு ஒரு காலத்தில் உன்னைப் பற்றித் துதிக்க ஒப்புக்கொண்டேன். எல்லையற்ற கடல் போன்ற உன்னுடைய பெருமைகளைத் துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால், சட்டென்று 1000 ச்லோகம் கொண்டு துதிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதனைக் கேட்ட நீ உன்னுடைய இனிமையான நாதம் கொண்டும், “எனது பெருமை ஆயிரம்தானா, ஆயிரம்தானா”, என்று மீண்டும் மீண்டும் கேட்கிறாய் போலும்.