Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 449)
Paththati 14 - நாத பத்ததி
முக்தஸ்ய ஹந்த பவதீம் ஸ்துவதோ மம ஏதாநி ஆகர்ணய நூநம் அயதாயத ஜல்பிதாநி இத்தம் வத த்வம் இதி சிக்ஷயிதும் ப்ரணாதாந் மஞ்ஜூந் உதீரயஸீ மாதவ பாதுகே த்வம்
ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஏதும் அறியாதவனாகிய, முட்டாளாகிய எனது பிழை நிறைந்த சொற்கள் கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் என்னிடம், ”இந்தச் சொற்களை நீ இவ்விதம் கூறுவாயாக”, என்று என்னைத் திருத்தும் பொருட்டு இனிமையான நாதம் எழுப்புகிறாய் போலும்.