Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 448)
Paththati 14 - நாத பத்ததி
தத்தாருசீம் ப்ரதயதா ருசிராம் ஸ்வரேகாம் வர்ண அதிகேந மதுஸூதன பாதரக்ஷே பச்யந்தி சித்தநிகஷே விநிவேச்ய ஸந்தோ மஞ்ஜு ஸ்வநேந தவ நைகமிகம் ஸுவர்ணம்
மது என்று அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நன்மை விரும்பும் சாதுக்கள் தங்களது மனதில் வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதனையும், உன்னுடைய இனிமையான நாதங்களையும், சாதாரண எழுத்துக்களில் இருந்து மாறுபட்டதான எழுத்துக்கள் கொண்ட வேதங்களையும் மனம் என்னும் உரைகல்லில் வைக்கின்றனர். இப்படிப்பட்ட மனம் என்ற உரைகல்லில், இந்த மூன்றில் எது சிறந்தது என்று ஆராய்ந்து பார்க்கின்றனர். அப்படிப் பார்க்கும்போது உயர்ந்த எழுத்துக்களை விட மாறுபட்டதான வேதங்களைக் காட்டிலும், ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும், மாறுபட்ட உனது இனிய நாதத்தையே மிகவும் உயர்ந்ததாகக் கொள்கின்றனர்.