Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 447)
Paththati 14 - நாத பத்ததி
ஸாமாநி ரங்கந்ருபதி: ஸரஸம் ச கீதம் லீலா கதேஷு விநிவாரயதி ஸ்வதந்த்ர: ச்ரோதும் தவ ச்ருதி ஸுகாநி விசேஷவேதீ மஞ்ஜூநி காஞ்சந பதாவநி சிஞ்ஜிதாநி
தங்கமயமான பாதுகையே! அனைத்து வஸ்துக்களின் தன்மைகளை அறிந்துள்ள ஸ்ரீரங்கராஜன், தனது விருப்பப்படி உற்சாகமாக ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது தனது பின்னே கேட்கின்ற ரசம் நிறைந்த ஸாம கானங்களையும், ஸங்கீதத்தையும் சற்றே நிறுத்துகிறான். ஏன் என்றால் - கேட்பதற்கு இனிமையாகவும், காதுகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாகவும் இருக்கின்ற உனது இனிமையான நாதம், எங்கும் கேட்பதற்காக ஆகும்.