Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 446)

Paththati 14 - நாத பத்ததி

விஸ்மாபிதேவ பவதீ மணிபாதரஷே வைரோசநே: விதரணேந ததாவிதேந ஏதாவதா அலமிதி தேவி க்ருஹீத பாதா நாதம் த்ரிவிக்ரமம் அவாரய தேவ நாதை:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகாதேவியே! விரோசனன் என்பவனின் புத்திரனாகிய மஹாபலியின் தாராள குணம் கண்டு நீ வியப்பு அடைந்தாய். மூன்று அடிகளால் உலகம் அளந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ பிடித்துக் கொண்டு, உனது நாதத்தால், “போதும் போதும்”, என்றாய்.

மூன்றாவது அடியால் மஹாபலியின் தலையில் திருவடியை வைத்து அழுத்தியவுடன், இத்தனை தாராள குணம் படைத்தவனை மேலும் துன்புறுத்தக்கூடாது என்று எண்ணி, ஸ்ரீரங்கநாதனின் திருவடியைப் பாதுகை தடுத்தது என்று கருத்து.