Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 445)
Paththati 14 - நாத பத்ததி
லாஸ்யம் விஹாய கிமபி ஸிதிதம் ஆச்ரயந்தீ ரங்கேச்வரேண சஹிதா மணிமண்டபேஷு மஞ்ஜு ஸ்வநேஷு விரதேஷு அபி விச்வம் ஏதத் மௌநேந ஹந்த பவதீ முகரீ கரோதி
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடன் கூடியவளாக, அவனது அழகான நடை என்னும் நாட்டியத்தைக் கொண்டவளாக நீ செல்கிறாய். அப்போது உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட மண்டபங்களில் ஸ்ரீரங்கநாதன் சற்றே நிற்கிறான். அந்த நேரத்தில் இனிமையான ஓசைகள் எழுகின்றன. அந்த ஓசைகள் ஓய்ந்த பின்னர், சில நொடிகள் உண்டாகும் மௌனத்தினால், உலகத்தினரை அதிகமாகப் பேச வைக்கிறாய் போலும். என்ன வியப்பு!
நம்பெருமாள் பெரியகோவிலில் ஸஞ்சாரம் செய்யும்போது, ஆங்காங்குள்ள மண்டபங்களில் சற்று நிற்கிறான். நின்ற வேகத்தில், பாதுகைகளின் உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் பலத்த ஒலியை எழுப்பி அடங்குகின்றன. அப்போது அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கின்ற மக்கள், அரங்கனையும் பாதுகைகளையும் வெகுவாகப் புகழ்ந்து கூறுகின்றனர்.