Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 444)
Paththati 14 - நாத பத்ததி
நித்ய ப்ரபோத ஸுபகே புருஷே பரஸ்மிந் நித்ராம் உபேயுஷி தத் ஏக விஹாரசீலா மஞ்ஜு ஸ்வநம் விஜஹதீ மணிபாதுகே த்வம் ஸம்வேசம் இச்சஸி பரம் சரண அந்திகஸ்தா
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! எப்போதும் விழித்தபடி உள்ள உயர்ந்தவனான, பரம்பொருளான ஸ்ரீரங்கநாதன் உறங்கும்போது, நீ செய்வது என்னவென்றால் - அவன் ஸஞ்சாரம் செய்யும்போது அந்த நடைக்கு ஏற்றாப்போல் இனிமையான நாதம் எழுப்பி நிற்பவள், அவனது திருவடியின் அருகில் நின்று உறங்குவதையும் ரசிக்கிறாய் போலும்.