Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 443)
Paththati 14 - நாத பத்ததி
போகாய தேவி பவதீ மணிபாதரக்ஷே பத்மா ஸஹாய அதிரோப்ய புஜங்க தல்பே விச்வஸ்ய குப்திம் அதிக்ருத்ய விஹார ஹீநா வாசம்யமா கிமபி சிந்தயதீவ கார்யம்
இரத்தினமயமான பாதுகா தேவியே! தாமரையில் உதித்த ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை, ஆதிசேஷன் என்ற படுக்கையில் சுகமாக சயனிப்பதற்காக எழுந்தருளச் செய்தாய். அதன் பின் மௌனமாக இருந்து கொண்டு, இந்த உலகத்தை எப்படிக் காப்பது என்று, ஏதோ ஒரு செயலைப் பற்றி எண்ணுகிறாய் போலும்.