Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 442)
Paththati 14 - நாத பத்ததி
பர்யங்கம் ஆச்ரிதவதோ மணிபாதுகே த்வம் பாதம் விஹாய பரிகல்பித மௌந முத்ரா ச்ரோதும் ப்ரபோ: அவஸரம் திசஸீவ மாத: நாபீ ஸரோஜ சயித அர்ப்ப: ஸாமகீதிம்
உயர்ந்த கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகை தாயே! சயனிப்பதற்கான கட்டிலை அடைந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை விட்டு, பேசாமல் உள்ள நிலையை நீ அடைகிறாய். ஏன் என்றால் ஸ்ரீரங்கநாதனின் திருநாபியில் உள்ள தாமரையில் படுத்துள்ள அவனது குழந்தையான நான்முகனின் ஸாமகானத்தை ஸ்ரீரங்கநாதன் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை நீ அளிக்கிறாய் போலும்.