Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 441)

Paththati 14 - நாத பத்ததி

கர்போபலை: கமன வேகவசாத் விலோலை: வாசாலிதா மதுபிதோ மணிபாதுகே த்வம் ப்ரஸ்தௌஷி பாவித தியாம் பதி தேவயாநே ப்ரஸ்தாந மங்களம் ம்ருதங்க விசேஷ கோஷம்

இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அழகான நடையின் வேகத்தால் உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக் கற்கள், அங்கும் இங்கும் அசைந்து, ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை எப்படி உள்ளது என்றால் – ஸ்ரீரங்கநாதனிடம் கொண்டு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தில் புத்தியை வைத்துள்ளவர்கள், அந்த வழியில் கிளம்புவதற்கான சிறந்த மிருதங்கத்தின் ஒசையை நீ உண்டாக்குவது போல் உள்ளது.