Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 440)
Paththati 14 - நாத பத்ததி
ஸம்ரக்ஷணாய ஸமயே ஜகதாம் த்ரயாணாம் யாத்ராஸு ரங்கந்ருபதே: உபதஸ்துஷீஷு ஸம்பத்ஸ்யதே ச்ருதி ஸுகை: மணிபாதரக்ஷே மங்கல்ய ஸூக்தி: அநகா தவ மஞ்ஜுநாதை:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த மூன்று உலகங்களையும் காப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் அவ்வப்போது, ஆங்காங்கு ப்ரயாணம் செய்கிறான். அப்போது வேதங்களை விட இனிமையாக உள்ள உன்னுடைய நாதங்கள் எழுகின்றன. இவை, தோஷங்கள் இல்லாத சுப சகுனத்தை விளக்குகின்ற சொற்களாக உள்ளன.