Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 439)
Paththati 14 - நாத பத்ததி
கால உபபந்ந கரண அத்யய நிர்விசேஷ்டே ஜாத ச்ரமே மயீ ஜநார்த்தன பாதரக்ஷே ஆச்வாஸநாய புரத: ப்ரஸரந்து மாத: வார்த்தா ஹரா: தவ ரவா: சமித ஆர்த்தய: மே
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் புலன்களின் தளர்ச்சி காரணமாக நான் அசைவில்லாமல் துன்பத்துடன் கிடக்கக்கூடும். அப்போது என்னை சமாதாநம் செய்வதற்காக நீ வருவாய். ஆனால் உனக்கு முன்பாக உன்னுடன் இனிமையான சப்தங்கள், ”இதோ! ஸ்ரீரங்கநாதனைப் பாதுகைகள் கொண்டு வருகின்றன”, என்று எனக்கு ஆறுதலாக முன்னே கேட்கவேண்டும்.