Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 438)

Paththati 14 - நாத பத்ததி

ரங்கேச பாதகமலாத் த்வத் அதீந வ்ருத்தே: அந்யேஷு கேஷுசித் அலக்ஷ்யம் அநந்யவேத்யம் ஆம்நாய கூடம் அபஹிர் மணிபி: க்வணத்பி: நேதீயஸாம் ப்ரதயஸிவ நிஜாநுபாவம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய பெருமைகள் என்பது உனக்கு, உன்னுடன் மிகுந்த நட்புடன் உள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு மட்டுமே தெரியும். இதனை மற்ற எந்த வஸ்துக்களாலும் அறிய இயலாது. இதனை யாரும் காண இயலாதபடி, வேதங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட உனது பெருமையை ஸ்ரீரங்கநாதனிடம் தலைவணங்கி நிற்பவர்கள் தலையில் உன்னை வைக்கும்போது, உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்களின் நாதம் மூலமாக அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறாய் போலும்.