Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 437)

Paththati 14 - நாத பத்ததி

பாஸ்வத் ஸுவர்ண வபுஷாம் மணிபாதரக்ஷே பத்மா ஸஹாய பதபத்ம விபூஷணாநாம் மஞ்ஜீர சிஞ்ஜித விகல்பித மஞ்ஜுநாதா மஞ்ஜூஷிகேவ பவதீ நிகமாந்த வாசாம்

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஸ்வர்ணமயமாக உள்ளன. ஸ்ரீரங்க நாச்சியாரின் நாயகனான அவனது தாமரை போன்ற மென்மையான அந்த திருவடிகளுக்கு ஆபரணங்கள் போன்று வேதாந்த வாக்கியங்கள் உள்ளன. அப்படிப்பட்ட வேதாந்த வாக்கியங்களை வைக்கும் பெட்டி போன்று நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னுடைய இனிமையான நாதம், அவனது திருவடிச் சிலம்பின் தண்டை போன்று இனிமையாக ஒலிக்கின்றன.