Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 436)
Paththati 14 - நாத பத்ததி
க்ரந்தத்ஸு காதர தயா கரண வ்யபாயே ரங்க உபசல்ய சயிதேஷு ஜநேஷு அலக்ஷ்யம் ஆஸீதஸி த்வரிதம் அஸ்கலித அநுகம்பா மாதேவ மஞ்ஜு நிநதா மணிபாதுகே த்வம்
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! திருவரங்கத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், தங்களது இந்திரியங்கள் உடலை விட்டு நீங்கும் காலத்தில், பயம் காரணமாக அழக்கூடும். அப்போது என்றும் தவறாத தயை குணம் உடைய நீ, அவர்களது தாய் போன்று, இனிமையான ஒலியுடன் கூடியவளாக மிகவும் வேகமாக, அவர்கள் அருகில் ஓடிவருகிறாய்.