Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 435)

Paththati 14 - நாத பத்ததி

மாநேஷு தானவ ரிபோ: மணிபாதரக்ஷே த்வாம் ஆச்ரிதேஷு நிகமேஷு அவதீரிதேஷு மஞ்ஜு ஸ்வநை: வதஸி மா ஏவம் இதி இவ மாத: வேலாம் விலங்கயிஷத: மநுஜாந் நிரோத்தும்

தாயே! அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இனிமையான ஒலியைக் கேட்கும் ஒரு சிலர், ப்ரமாணங்களாக உள்ள வேதங்களையே ஒதுக்க நினைக்கின்றனர். இப்படியாகக் கட்டுப்பாட்டை மீறும் அவர்களை தடுப்பதற்காக, உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “இது போன்று செய்தல் கூடாது”, என்று உணர்த்துகிறாய் போலும்.