Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 434)

Paththati 14 - நாத பத்ததி

நித்யம் ஸமாஹிததியாம் உபதர்சயந்தீ நாகேசயம் கிமபி தாம் நிஜ ஊர்த்வபாகே ஹ்ருத் கர்மணிகாம் அநுகதா மணிபாதுகே த்வம் மஞ்ஜுஸ்வநா ஸ்புரஸி வாக் ப்ரமரீ பரேவ

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மற்ற விஷயங்களில் தங்கள் புத்தியைத் திருப்பாமல், தங்கள் வசப்பட்டுள்ள புத்தியுடன் உள்ளவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்களது இதயத்தின் நடுவில் உள்ள ஹ்ருதய கமலத்தில், ஆதிசேஷன் மீது சயனித்துள்ளபடி இருக்கும் தேஜஸ்ஸான பெரியபெருமாளை, உன் மீது அவன் உள்ளபடி காண்பிக்கிறாய். இப்படியாக நீ வேதங்கள் என்னும் வாக்கை இடைவிடாமல் ஒலிக்கின்ற பெண்வண்டு போன்றுள்ளாய்.