Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 433)

Paththati 14 - நாத பத்ததி

ப்ராப்தும் பரம் புரிசயம் புருஷம் முநீநாம் அப்யஸ்யதாம் அநுதினம் ப்ரணவம் த்ரிமாத்ரம் ஸ்ரீரங்கராஜ சரணாவநி சிஞ்ஜிதம் தே சங்கே ஸமுந்நயன ஸாம விசேஷ கோஷம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எவ்விதம் உள்ளது என்றால் - அனைவரிலும் உயர்ந்தவனாகவும், நம் இதயத்தில் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனை அடைய மூன்று மாத்திரைகள் அளவுள்ள ப்ரணவத்தை அன்றாடம் ஜபிக்கிறார்கள் அல்லவா, அந்த யோகிகளை அவனிடம் அழைத்துப் போகும் ஸாமங்களின் இனிய நாதமாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.