Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 432)
Paththati 14 - நாத பத்ததி
ஸஞ்சார கேளி கலஹாயித கர்ப்ப ரத்நா ஸாம்ஸித்திகம் ஸகல ஜந்துஷு ஸார்வபௌமம் ரக்ஷார்த்திநாம் ப்ரதயஸீவ பதாவநி த்வம் ரங்கேச்வரஸ்ய நிரவக்ரஹம் ஆந்ருசம்ஸ்யம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸஞ்சாரம் என்றும் விளையாட்டு மூலம் தன்னுள் இருக்கும் இரத்தினக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்படியாக , இவ்விதம் அந்தக் கற்களை உன்னுள் இயற்கையாக வைத்துள்ளவளே! இந்தச் சப்தம் மூலம் – அனைவரும் அறிந்ததும், தடங்கல் இல்லாமல் உள்ளதும், அனைத்து உயிர்களிடத்தில் வெளிப்படுவதும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் கருணையை, அனைவருக்கும் கூறுகிறாய் போலும் .