Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 431)
Paththati 14 - நாத பத்ததி
தாக்ஷிண்யம் அத்ர நியதம் நியதா ஸுதாஸ்மிந் இதி உத்கத: நியதம் அச்யுத பாதரக்ஷே ப்ரத்யேக ஸம்ச்ரித பதஸ்துதயே பவத்யோ ஸங்கர்ஷ வாத இவ மத்ய மணிப்ரணாத:
அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உங்களுக்குள் இருக்கும் இரத்தினக்கற்கள் ஒன்றுடன் மோதிக் கொள்ளும்போது எழும் நாதம் எவ்விதம் உள்ளது என்று தெரியுமா? நம்பெருமாளின் இடது திருவடியில் அமிர்தம் உள்ளது என்று இடது பாதுகையும், வலது திருவடியில் அளவு கடந்த தாக்ஷிண்யம் (வேண்டுவதை மறுக்க இயலாத தன்மை) உள்ளது என்று வலது பாதுகையும் கூறி, போட்டி இடுவது போன்று உள்ளது.