Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 430)

Paththati 14 - நாத பத்ததி

அந்த: சரேஷு பவநேஷு ஜுதேஷு அபிஜ்ஞா: ப்ருத்யங்முகீம் பரிணமய்ய மந:ப்ரவ்ருத்திம் ஆஸ்வாதயந்தி ஸரஸம் மணிபாதரக்ஷே நாத அவஸாந ஸமயே பவதீ நிநாதம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! யோகம் செய்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் ப்ராணவாயுவை வசப்படுத்திய பின்னர், அந்தப் ப்ராணவாயு இயங்கும் சப்தமானது சற்றே நிற்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் உனது இனிய நாதத்தைக் கேட்டு மிகவும் அனுபவித்தபடி உள்ளனர்.