Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 429)

Paththati 14 - நாத பத்ததி

ப்ராய: பதாவநி விபோ: ப்ரணய அபராதே மாந க்ரஹம் சமயிதும் மஹிஷீ ஜநாநாம் உச்சாரயந்தி நிநதை: தவ கர்ப்பரத்நாநி உத்காதம் அக்ஷரம் உபாச்ரய பாரதீநாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாரிடம் சரியாகப் பழகாமல் இருந்தால் அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. இந்தக் கோபம் என்னும் பிசாசை எது விரட்டுகிறது? உன்னுடையை இனிய நாதங்களே ஆகும். எப்படி? அந்த நாதங்கள் மூலம், உன்னையே அண்டியுள்ள வேதங்களின் தொடக்க எழுத்தான ப்ரணவம் உச்சரிக்கப்படுகிறது. இதனாலேயே அந்தப் பிசாசு ஓடி விடுகிறது.