Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 428)

Paththati 14 - நாத பத்ததி

ஸாதாரணேஷு யுவயோர் மணிபாதரக்ஷே தேவஸ்ய தாநவ ரிபோ: த்ரிஷு விக்ரமேஷு அத்யாபி சிஞ்ஜிதமிஷாத் அநுவர்த்தமாநம் ந்யூநாதிகத்வ விஷயம் கலஹம் ப்ரதீம:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உங்கள் இரண்டு பேருக்கும் (இரண்டு பாதுகைகள்) அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள் பொதுவாகவே உள்ளன. அப்படி இருந்தும், அவன் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது வைத்த மூன்று அடிகள் விஷயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக, உங்கள் இருவருக்கும் அடிக்கடி சச்சரவு உள்ளது போலும். இதனையே உனது நாதமாக நாங்கள் எண்ணியபடி உள்ளோம் .