Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 427)
Paththati 14 - நாத பத்ததி
நித்யம் விஹாரஸமயே நிகம அநுயாதை: விக்ஷேப தாண்டவித கர்ப்பமணி ப்ரஸூதை: நாதை: ஸ்வயம் நரகமர்த்தந பாதரக்ஷே நாத அவஸாந நிலயம் வதஸீவ நாதம்
நரகாசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸஞ்சார காலங்களில் நம்பெருமாள் வேதங்கள் தன்னைப் பின் தொடர வருகிறான். அந்த வேதங்கள் மூலமாக, உனது உள்ளே இருக்கும் இரத்தினங்கள் அசைகின்றன. அப்போது எழும் இனிய நாதம் மூலம், ஸ்ரீரங்கநாதன் அந்த நாதத்தின் முடிவில் உள்ளவன் என்று கூறுகிறாய் போலும்.