Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 426)
Paththati 14 - நாத பத்ததி
ப்ராயேண ஸஹ்ய துஹிது: நதராஜ கன்யா: ஜாமாது: ஆகமந ஸூசநம் ஈஹமாநா மஞ்ஜுப்ரணாத ஸுபகை: மணிபாதுகே த்வாம் அந்தர்யுதாம் அக்ருத யௌதக ரத்ந கண்டை:
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! காவேரியின் மாப்பிள்ளையான நம்பெருமாள், காவேரியின் கரைக்கு வருவதை, காவேரிக்கு அறிவிக்க ஸ்ரீரங்கநாச்சியார் விரும்பினாள். இதனால் தனக்குச் சீதனமாக வந்த உயர்ந்த இரத்தினக் கற்கள் பலவற்றையும் உனது குமிழுக்குள் வைத்து, நீ வரும்போது இனிமையான நாதம் ஏற்படும்படிச் செய்தாள் போலும்.