Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 425)

Paththati 14 - நாத பத்ததி

யாத்ரா விஹார ஸமயேஷு ஸமுத்திதம் தே ரங்காதிபஸ்ய சரணாவநி மஞ்ஜுநாதம் பர்யாகுல இந்த்ரிய ம்ருக க்ரஹணாய பும்ஸாம் ஸம்மோஹநம் சபரகீதம் இவ ப்ரதீம:

ஸ்ரீரங்ககநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மான்களைப் பிடிப்பதற்காகக் கானகத்தில் வேடர்கள் இனிய இசையை எழுப்புவது வழக்கம் ஆகும். இது போன்று நம்பெருமாள் வீதிகளில் ஸஞ்சாரம் வரும்போது நீ செய்வது என்ன? எங்கள் போன்றவர்களின் புலன்கள் என்னும் மானைப் பிடிக்க, உனது நாதம் என்னும் இனிய இசையை எழுப்பியபடி வருகிறாய் என்றே நாங்கள் கருதுகிறோம்.